திடக்கழிவுகளை சேகரித்து பணம் சம்பாதிக்கலாம்: கிராம வளர்ச்சி அமைப்பு தலைவர் அறிவுரை

கோலார்: நாம் தினந்தோறும் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் தேவையற்றது என எண்ணி ஒதுக்கப்படுவதை இ-வேஸ்ட் மூலம் மறு சுழற்சி  முறையில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என கிராம வளர்ச்சி அமைப்பின் தலைவர் ரேணுகா கூறினார். மாவட்ட சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு கழிவுகள் மூலம் பலன் அடைவது குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும்,  நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் மழை நீரை சேகரிப்பது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு  விருந்தினராக கலந்துகொண்டு கிராம வளர்ச்சி அமைப்பின் தலைவர் ரேணுகா பேசுகையில், ``கழிவு சேகரிக்கும் விவகாரத்தில் பெண்களுக்கு அதிக  பங்குண்டு.

கழிவுகளை சேகரிக்கும் பெண்களுக்கு இப்பணி ஒரு பாரமாக இருக்காது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். கழிவுகளை மறு சுழற்சி  மூலம் மின் உற்பத்தி உட்பட பலவகையில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, பெண்கள் கழிவுகளில் இருந்து திடக்கழிவுகளை பிரித்தெடுத்து அவற்றை  பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து பணத்தை  சம்பாதிக்கலாம்.  நாட்டில் நிலத்தடி நீர் குறைந்துள்ளதால் குடிநீர் இன்றியும் விவசாயம் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கவேண்டும் என்றால் நிலத்தடி நீரை  சுத்திகரிப்பு செய்யவேண்டியது அவசியம். எனவே, பொதுமக்கள் அனைவரும் மழை நீரை வீணாக்காமல் அதை சேமிக்கவேண்டியது அவசியம். மேலும்  பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் அவற்றை வீசி எறியும் போது கால்நடைகளை சாப்பிட்டு இறக்க நேரிடுகிறது. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை  தவிர்க்கவேண்டியது அவசியம்’’ என்றார்.

Related Stories:

>