×

சட்டவிரோத கட்டுமானம் நொய்டாவில் 22 கோடி மதிப்பு வீடுகள் பறிமுதல்

நொய்டா: நொய்டாவில் சட்டவிேராதமாக கட்டுமான பணியில் முடிக்கப்பட்ட ரூ.22.40 கோடி மதிப்புள்ள 56 பிளாட் வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நொய்டா ஷாெபரி பகுதியில் சத்யம் ரியல் பில்டர்ஸ் தனியார் நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதுபற்றி 2019ல் பிஸ்ராக் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் சட்டவிரோதமாக கட்டுமான பணிகள் நடப்பதாக புகார்கள் கூறப்பட்டன. இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் ரோகித், ஹரிஷ், விகாஸ் சவுத்திரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி இந்த நிறுவனத்தினர் சட்டவிரோதமாக கட்டிய ரூ.22.40 கோடி மதிப்புள்ள 56 பிளாட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஷாபெரி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அவர்கள் சட்டவிரோதமாக அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனி வீடுகள் கட்டியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர்கள் இந்த பிளாட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188, 420, 467, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழும், ரவுடிக்கும்பல் சட்ட அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கவுதம்புத்தா போலீசில் இதுவரை ரவுடிக்கும்பல், மபியா கும்பல் சட்டவிரோதமாக சம்பாதித்த ரூ.130 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags : Seizes ,Noida , Illegal construction 22 crore in Noida Confiscation of value homes
× RELATED பங்குச்சந்தை வர்த்தகம் எனக்கூறி...