டெல்லியில் பரவும் தற்போதைய கொரோனா அலையால் அதிகளவில் இளைஞர்கள் பாதிப்பு: துறைசார் நிபுணர்கள் தகவல்

புதுடெல்லி: வெளியில் வேலைக்குச் சென்றுவரும் 30-50 வயதுக்கிடையே உள்ள இளைஞர்கள் தற்போதைய இரண்டாவது கொரோனா அலையால் நோய் தாக்குதலுக்கு இலக்காகி வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவத்தொடங்கி பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லியை பொறுத்தவரை, தற்போது கொரோனா நான்காம் அலை வீசத்தொடங்கி தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய இந்த நான்காம் அலையால் அதிக அளவில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் இளைஞர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அப்போலோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் சுரன்ஜித் சட்டர்ஜி கூறுகையில்,”இளைஞர்கள் அதிக அளவில் வெளியே வேலை செய்கிறார்கள்.  

பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.இதன்மூலம்  அவர்களுக்கு  மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. பலர் இன்னும்  முககவசங்களை அணியாமல் செல்கின்றனர். அல்லது சமூக தூரத்தை பராமரிப்பதில்லை.  இதுவும் நோய் பரவல் அதிகரிக்க காரணமாக உள்ளது. எனினும், முந்தைய அலையின் போது கடந்த ஆண்டு ஜூன், செப்டம்பர் மற்றும் நவம்பரில் பதிவான எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், கொரோனாவால் தற்போது நிகழும் உயிரிப்புகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது”என்றார்.

Related Stories:

>