×

நரேலா மண்டியில் கொள்முதல் நடக்கவில்லை விவசாயிகளை துன்புறுத்துகிறது எப்சிஐ: அமைச்சர் கோபால் ராய் குற்றச்சாட்டு

புதுடெல்லி: வடக்கு  டெல்லியில் உள்ள நரேலா மண்டியில் ஆய்வு செய்த டெல்லி விவசாயத்துறை அமைச்சர் கோபால்ராய், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை தானியத்தை கொள்முதல் செய்ய மறுத்து விவசாயிகளை இந்திய உணவுக் கழகம் துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.இதுகுறித்து கோபாரால் ராய் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: கோதுமை உணவு தானியத்தை கொள்முதல் செய்வதற்கான கவுன்டர் எதுவும் நரேலா மண்டியில் அமைக்கப்படவில்லை. கொள்முதலும் நடைபெறவில்லை. கடந்த சில நாட்களாக,நரேலா மண்டியில் குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில்(எம்எஸ்பி)  தானியங்களை  கொள்முதல் செய்யும் பணியை எப்சிஐ  தொடங்கவில்லை என்ற பிரச்சினையை விவசாயிகள்  எழுப்பினர். இதையடுத்து, கடந்த  ஏப்ரல் 1 முதல் கொள்முதல் தொடங்கப்பட்டதாக எப்சிஐ கூறியது.

ஆனால்,   நேற்று மண்டியிடமிருந்து அறிக்கை கேட்ட பிறகு,  இங்கே எந்த  கவுண்டரும் இல்லை என்பது எங்களுக்கு தெரியவந்தது.மேலும், ஆலோசனை கூட்டத்திற்கு எப்சிஐ அதிகாரிகள் கலந்துகொள்ள வரவில்லை. வந்த சில அதிகாரிகளும் பேசுவதற்கு தயாராக இல்லை. கவுன்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தால் அதை காட்டுங்கள். கவுன்டர்கள் இல்லாதபட்சத்தில் அதுபற்றி பொய்களை கூற வேண்டாம். அதேபோன்று, கொள்முதல் நடைபெறுகிறதா என்பது பற்றி கேட்டபோது, இலலை என்றே விவசாயிகள் கூறினர். ஒவ்வொரு ஆண்டும் மண்டியில் தான் கொள்முதல் நடைபெறும். ஆனால், இதுவரை மண்டியில் கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் மூலம் விவசாயிகளை எப்சிஐ வஞ்சித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 7ம் தேதியன்று என் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுக்கப்பட்டது. எம்எஸ்பி விலையில் கோதுமைகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய எப்சிஐ அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியிறுத்தி இரண்டு முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.  மேலும், நரேலா மற்றும் நஜாப்கர்க் மண்டிகளில் கவுன்டர்கள் அமைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.  ஆனால், இதுவரை எந்த பலனும் இல்லை. இவ்வாறு ராய் தெரிவித்தார்

கோபால்ராய் குற்றச்சாட்டில் உண்மை இல்லை பாஜ மறுப்பு
இந்திய உணவு கார்ப்பரேஷன்(எப்சிஐ) சார்பில் கோதுமை கொள்முதல் நடைபெறவில்லை என்கிற அமைச்சர் கோபால்ராயின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. பொய்யான தகவல்களை அவர் தெரிவித்து வருகிறார். புகார் உண்மையனில்  குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும். இல்லையேல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜ கட்சி கோபால் ராய்க்கு சவால் விடுத்தது.இதுபற்றி பாஜ எம்எல்ஏ ராம்வீர் சிங் பிதுரி கூறுகையில்,” ஏப்ரல் 1 முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை கொள்முதல் செய்யத் தொடங்கியது எப்சிஐ.

உண்மை இவ்வாறாக இருந்தபோதிலும், கோபால் ராய் அத்தகைய கொள்முதல் எதுவும் நடைபெறவில்லை என்று பொய்களை கூறிவருகிறார். மேலும், டெல்லி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பிதுரி, கோபால்ராய் என்னுடைய கருத்தை பொய் என்று நிருபித்தால் பதவியை விட்டு ராஜினாமாசெய்ய தயார்”என்றார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் கிசான் மோர்ச்சா தலைவர்கள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்திப்பார்கள் என்றும் பிதூரி கூறினார்.



Tags : Narela Mandi FCI ,Minister Gopal Roy , The purchase did not take place in Narela Mandi FCI harasses farmers: Minister Gopal Roy
× RELATED டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை...