×

வீரர்களை வாபஸ் பெறுவது குறித்து இந்தியா- சீனா இடையே 11ம் கட்ட பேச்சுவார்த்தை

புதுடெல்லி: கடந்த மே மாதம் தொடங்கி இந்தியா-சீனா இடையே, லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதனால் இருநாடுகளும் வீரர்களை குவித்தன. எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை  மூலமாக பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இதனை தொடர்ந்து ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 10 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதனை  தொடர்ந்து பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து இருநாட்டு வீரர்களும் திரும்ப பெறப்பட்டனர்.

இந்த முன்னேற்றத்தை தொடர்ந்து 11வது கட்ட பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கின் சுசூல் பகுதியில் நேற்று நடைபெற்றது. லெப்டினன்ட் ஜெனரல் மேனன் தலைமையிலான இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில்,  லடாக்கின் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், தெப்சாங் சமவெளி பகுதியில்இருந்தும் படைகளை திரும்ப பெற்றுக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : India ,China , India-China 11th round of talks on withdrawal of troops
× RELATED சொல்லிட்டாங்க…