முதல் ஐபிஎல் டி20 போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: முதல் ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் டி20 தொடரில் 14-வது சீசன் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் தொடங்கியது. ஐபிஎல் டி20 முதல் போட்டி டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.  160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

Related Stories:

>