×

தரையில் கொரோனா நோயாளிகள்; குப்பை வண்டியில் கொண்டு செல்லப்படும் வெண்டிலேட்டர்கள்!: குஜராத் மாநில அரசின் அலட்சியம்..!!

சண்டிகர்: கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளை தரையில் படுக்கவைத்து சிகிச்சை மேற்கொள்ளப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கையும்  பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை தரையில் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதனை குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித்ஸாவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அரசின் அலட்சியமான செயல்பாடுகளால் குஜராத்தில் கொரோனா பரவல் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அரசின் அலட்சியத்தால் நிலைமை மிக மோசமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே குஜராத் மாநிலம் சூரத்தில் 34 வெண்டிலேட்டர்கள் குப்பை வண்டியில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.

Tags : Gujarat , Turf, corona patients; Garbage cart, ventilators, Gujarat
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்