கட்டி முடித்து 3 ஆண்டாகியும் கறம்பக்குடியில் பயன்பாட்டிற்கு வராத அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்: ஆளும்கட்சியினர் தலையீட்டால் காலம் கடத்தும் அவலம்

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. கறம்பக்குடியை சுற்று ஏராளமான கிராமங்கள் உள்ளன. கறம்பக்குடி பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, ஈரோடு, சென்னை போன்ற பகுதிகளுக்கு தினம் தோறும் அரசு, தனியார் பேருந்துகள் 60 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கறம்பக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

கறம்பக்குடி காவல் நிலையம் அருகே உள்ள அண்ணா பேருந்து நிலையம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியின்போது, கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து கீழே இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதையடுத்து பேருந்து நிலையத்தை முழுவதுமாக அகற்றி, புதிய பேருந்து நிலையத்தை அரசு உடனே அமைத்து தர வேண்டும் என்று கூறி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து பேரூராட்சி மூலமாக டெண்டர் விடப்பட்டு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஆளும் அதிமுக அரசு வேண்டுமென்றே பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஆளும் அதிமுக அரசு இதுவரை திறக்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இது பொதுமக்களை ஆத்திரமடைய செய்துள்ளது. இதுகுறித்து கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் கடைவரும் ஒருவர் கூறுகையில், பேருந்து நிலையம் தற்போது திறக்க படாததால் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நாங்கள், அதிகமாக கடன்களை வாங்கி கடைகளை பெற்றுள்ளோம்.

பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படாததால் போதிய வியாபாரம் இன்றி பெரும் நஷ்டத்தில் உள்ளோம். எனரே உடனடியாக கடை வியாபாரிகள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பேருந்து நிலையம் முன்பு அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் கூறினர். எனவே சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் திறக்கப்படாமல், இழுத்தடிக்கும் நிலையில் உள்ள பேருந்து நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: