வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்; காரியாபட்டி அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

காரியாபட்டி:  காரியாபட்டி அருகே கிராமப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. காரியாபட்டி அருகே அல்லிக்குளம் கிராமப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது. ஊருக்கு அருகிலும், ஊரை ஒட்டியும் நேற்று முன்தினம் இரவில் சிறுத்தை நடமாடியதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். உடனே  போலிசாருக்கு அளித்த தகவலை அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதற்கிடையில் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படது. அவர்கள் சிறுத்தையை பிடிப்பதற்கு இன்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே, பொது மக்கள் யாரும் இரவு, பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே யாரும் வர வேண்டாம் என வனத்துறையும், வருவாய்த்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை முதல் வனசரக அலுவலர் கோவிந்தன், காரியாபட்டி எஸ்ஐ ஆனந்தஜோதி உட்பட்ட குழுவினர் அல்லிக்குளம், கிழவனேரி கண்மாய் மற்றும் காட்டுப்பகுதியில் தேடி வருகின்றனர். ஒரு ஊரணியில் சிறுத்தை தண்ணீர் குடித்து சென்ற கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் இன்று வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வருவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் முன் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>