காங்கேயம் அருகே பழுதடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்

காங்கயம்: காங்கயம் - கோவை சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலையில் தினமும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் காங்கயம் - கோவை சாலையில் உள்ள இந்தியன் வங்கி (காடையூர் கிளை) அருகே, இந்த சாலையின்  நடுவே பழுதடைந்து பள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அவ்வப்போது கீழே விழுந்து சென்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

எனவே போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில்,  சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று பார்விட்டு  பழுதடைந்த இந்த சாலையை சரிசெய்து, சீரான வாகன போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: