×

தமிழகத்தில் வன்னியர் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

டெல்லி: தமிழகத்தில் வன்னியர் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில், தற்காலிக சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் முழக்கங்களை எழுப்பி வந்தனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு அதிருப்தி குரல்கள் வெளிவந்தன. இதனை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த சில மாதம் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி இந்த வழக்கில் தமிழக அரசு 8 வாரங்களில் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து வன்னியர் சமூகத்துக்கு அளிக்கப்பட 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகமுத்து என்பவர் ஆஜராகி வாதாடினார். அப்போது இந்த 10.5% ஏதன் அடிப்படியில் கொடுக்கப்பட்டது என்ற ஒரு விவரமும் இல்லை. எனவே சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் வழங்கியிருந்தால் இதை ஏற்றுக்கொள்வதாக இருந்தது.

ஆனால் இந்த 10.5% என்பது ஒரு உத்தேச அடிப்படையில் தான் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே பிற சமூக மக்களுக்கு அநீதி விளைவிப்பதாகும். எனவே இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதிகள் ரத்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததோடு இது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Supreme Court ,Vannier Community ,Tamil Nadu , Supreme Court refuses to ban 10.5% allocation given to Vanniyar community in Tamil Nadu ..!
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...