×

காஷ்மீரில் பள்ளிவாசலுக்குள் பதுங்கி இருந்த 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை : துப்பாக்கிச் சண்டையில் 4 பாதுகாப்புப் படையினர் காயம்

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற 2 வெவ்வேறு துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில்  உள்ள ஜன்மகுல்லா என்ற இடத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிவாசலுக்குள் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை கண்டதும் திடீர் தாக்குதல் நடத்தினர்.    

சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் 3 பேரும் அல்கொய்தா ஆதரவு பெற்ற என்ற அன்சார் கஸ்வாத்-உல்-ஹிந்த் என்ற  தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 4 பாதுகாப்புப் படையினர் காயம் அடைந்தனர். இதனிடையே மேலும் தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருப்பதாக  வந்த தகவலை அடுத்து அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ள பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். வீழ்த்தப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஏரளாமான தானியங்கி துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே அவந்திப்புரா அருகே டிரால் என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாகக் காவல்துறை ஐஜி தெரிவித்துள்ளார்.


Tags : Kashmir , தீவிரவாதிகள்
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...