×

லடாக் மோதல் விவகாரம்!: படைகளை முற்றிலும் திரும்ப பெறுவது குறித்து இந்தியா - சீனா இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை..!!

டெல்லி: லடாக் மோதல் விவகாரத்தில் இந்தியா -  சீனா எல்லை பிரச்சனையை தீர்க்க ராணுவ தளபதிகள் இடையிலான 11வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் முற்றிலுமாக படைகளை திரும்ப பெறுவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா  - சீனா இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. அப்போது இரு நாடுகளும் அங்கு தங்களது படைகளை குவித்தனர்.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கவும், படைகளை வாபஸ் பெறவும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே இதுவரை 10வது சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. 10வது சுற்று பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பாங்சோன் ஏரி கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த இருநாட்டு படைகளும் கடந்த பிப்ரவரி மாதம் திரும்பபெறப்பட்டன. இந்த நிலையில் இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையே 11வது சுற்று பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கின் சுஷில்செக்டாரின் இந்திய பகுதிக்குள் இன்று நடைபெறுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு அசல் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் அடுத்தகட்ட படை வாபஸ் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லடாக் எல்லையில் சீனா குவித்துள்ள படைகளை கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலைக்கு திரும்ப பெற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Ladakh ,India ,China , Ladakh conflict, Indo-Chinese military officials, 11th round of talks
× RELATED மோடியின் சீன உத்தரவாதம் லடாக் மக்களுக்கு துரோகம்: கார்கே சாடல்