கொரோனா தொற்றால் பாதித்த பினராயி விஜயன் விரைந்து நலம் பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின், கமல் உள்ளிட்டோர் ட்வீட்

திருவனந்தபுரம் : கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கு கொரோனா உறுதியாதையடுத்து பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களித்தார். இதேபோல அவரது கணவர் முகமது ரியாஸ், மகன் இஷான் ஆகியோருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பினராயி விஜயனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த மார்ச் 3ம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பினராயி விஜயன் போட்டுக்கொண்டார். 2வது டோஸ் மருந்தை எடுத்துக்ெகாள்ள இருந்தபோது தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அறிந்து வருத்தமுற்றேன்.அவர் விரைந்து நலம் பெற விழைகிறேன்.பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

இதே போல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள். முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான்  உள்பட, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>