மெக்ஸிகோவில் 10 பேரில் ஒருவர் மரணம்.. பிரேசிலில் ஒரே நாளில் 4190 பேர் பலி..இந்தியாவில் தினந்தோறும் கொரோனா புதிய உச்சம்

ஜெனீவா : சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 134,499,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 2,914,191 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து 108,298,087 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்புடன் உலகில் தற்போது 23,287,272 பேர் சிகிச்சை [பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 78,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 31,715,453 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 994 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 573,842 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 89,293 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். இதனால் பிரேசிலில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 13,286,324 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,190 பேர் மரணம் அடைந்தனர். பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 345,287 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 13,057,954 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 802 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 167,694 ஆக உயர்ந்துள்ளது.

துருக்கியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 55,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,689,866 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 258 பேர் பலியாகி உள்ளனர். இதனால் துருக்கியில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 33,201 ஆக உயர்ந்துள்ளது.

மெக்ஸிகோவில் தான் கொடூரமாக உள்ளது. அங்கு 10 பேரில் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகும் நிலை உள்ளது. அதாவது மொத்தம் 596 பேர் நேற்று பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் என்றால் 5499 ஆகும்.

Related Stories: