டெல்லி விமான நிலையத்தில் 28 கோடி ஹெராயின் கடத்திய மாலத்தீவு நாட்டு பெண் கைது

புதுடெல்லி: தென்ஆப்ரிக்கா நாட்டின் ஜோகன்ஸ்பெர்க் நகரத்திலிருந்து டோகா வழியே டெல்லி வந்திறங்கிய பெண் ஒருவரின் நடமாட்டம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பெண்ணை மடக்கி பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் பெண் வைத்திருந்த டிராவல் பேக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது, டிராவல் பேக்கிற்குள் சிறிய பேக் ஒன்று இருந்தது. அதில் நான்கு பாக்கெட்டுகளில் ஹெராயின் போதைப்பொருள் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பெண்ணை கைது செய்து உள்ளூர் போலிசில் ஒப்படைத்தனர். கடத்தி வந்த ஹெராயின் போதைப்பொருளின் எடை சுமார் 4 கிலோ ஆகும். இதன் மதிப்பு ₹28 கோடி என ஐஜிஐ விமான நிலைய சுங்கத்துறையின் இணை கமிஷனர் சவுகத் அலி நுர்வி தெரிவித்தார். விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் மாலத்தீவு நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

Related Stories:

>