திருட்டுப்பொருட்களை திருப்பி தருவதாக கூறி பணம் பறிப்பு: நூதன கொள்ளையர்கள் இருவர் கைது

புதுடெல்லி: ஓக்லா பேஸ்-1 பகுதியில் ஏராளமான திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், பொருட்களை கொள்ளையர்களிடம் பறிகொடுத்த பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், தன்னிடம் இருந்த திருடிய பொருட்களை திருப்பித் தர வேண்டுமெனில், டிஜிட்டல் முறையில் வங்கக்கணக்கில் பணத்தை செலுத்தும்படி கொள்ளையர்கள் மிரட்டுவதாக தெரிவித்து இருந்தனர். எனவே, கொள்ளையர்களிடம் இருந்து தனது திருட்டுப்போன பொருட்களையும் மீட்டுத்தர வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க போலீசார் விசாரணையை தொடங்கினர்.

ஓக்லா பேஸ்-1 பகுதியில் பதிவாகியிருந்து சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றின் லொகேஷன் ஆகியவற்றைக் கொண்டு துப்பு துலக்கியதில், நஜாப்கர்க் பகுதியிலுள்ள நங்கிலி டெய்ரி ஒருவரை மடக்கி கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் நிர்மல் பாண்டே என தெரியவந்தது.

அதோடு, அவர் தெரிவித்த தகவலின் பேரில் கூட்டாளியான குண்டன் பாண்டேவையும் அதே பகுதியில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், லேப்டாப், மற்றும் இரணடு டெபிட் கார்டுகள் ஆகியவைற்றை போலீசார் பறிமுதல் செய்ததாக துணை கமிஷனர் ஆர் பி மீனா தெரிவித்தார். இவர்களின் கைது மூலம், இவர்களுக்கு எதிரான மூன்று கொள்ளை வழக்குகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக தெரிவித்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>