×

கொரோனா தொற்று பாதிப்பில்லாத பெங்களூரு: ஆம் ஆத்மி விருப்பம்

பெங்களூரு: கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெங்களூருவை கொரோனா பாதிப்பு இல்லாத நகரமாக உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சாந்தலாதாம்லே தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்ட அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் தினமும் புதியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம் ஆத்மி சார்பாக பெங்களூருவில் உள்ள அனைத்து வார்டுகளில் கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்கள், கோயில்கள் உட்பட பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இலவசமாக மாஸ்க், கிருமிநாசனி வழங்கி மக்களுக்கு வழங்கப்படும். இத்துடன் மாஸ்க், சமூக இடைவெளி, கிருமிநாசனி, கொரோனா தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெங்களூரு நகரை கொரோனா பாதிப்பு இல்லாத நகரமாக உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஏப்ரல் மாதங்களில் யுகாதி உட்பட பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் அந்த நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பாதுகாப்பான யுகாதியை கொண்டாட மக்கள் மத்தியில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகவுள்ளது என்றார். உடன் சுரேஷ், பிரகாஷ் ஆகியோர் இருந்தனர்.



Tags : Bangalore , Corona-free Bangalore: Aam Aadmi Party preference
× RELATED ஜூலை 1ம் தேதி முதல் புதுவையில் இருந்து...