ஒரே வீட்டில் வசித்து வந்த இரண்டு பேர் கத்தியால் குத்திக்கொலை

பெங்களூரு: பெங்களூரு புட்டேனஹள்ளி சரகத்திற்குட்பட்ட ஜே.பிநகர் 7வது ஸ்டேஜில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வந்தவர் மமதா புஷ்பா (71). இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மகள் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகன் மருத்துவராக பணியாற்றி வருகிறார். வடமாநிலத்தில் வசித்து வருகிறார்.

கடந்த 25 நாட்களுக்கு முன்பு மகனின் நண்பர் என்று கூறி தேவரத் கிஹோரா (41)என்பவர் மமதாவின் வீட்டில் வந்து தங்கியிருந்தார். மேலும் பிரபல தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் சாப்பிட்டு, வழக்கம்போல மமதா முதலாவது மாடியில் தூங்குவதற்கு சென்றுவிட்டார். தேவரத் தரை தளத்தில் உள்ள அறையில் தூங்கி கொண்டிருந்தார்.

மமதாவை கொன்றுவிட்டு  நகைகளை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் கீழ் தளத்தில் வந்தபோது, சத்தம் கேட்டு தேவரத் எழுந்திருந்தார். அவரை பார்த்த மர்ம நபர்கள், அதே கத்தியை கொண்டு, தேவரத்தையும் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். நேற்று காலை வீட்டு வேலைக்காரர் வந்து பார்த்தபோது கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து புட்டேனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் வீட்டில் இருந்த லேப்டாப், தங்க நகைகள், பணம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. அதனால் பணத்திற்காக இந்த கொலை நடந்திருப்பதை உறுதி செய்த போலீசார் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது குறித்து புட்டேனஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>