×

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக கமல் வழக்கில் சிபிஐயை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ல் நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூட்டி 13 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து 144 தடை உத்தரவை மீறி கூட்டமாக சென்று காயமடைந்தவர்களை சந்தித்ததாக அவர் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் கமல்ஹாசன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தான் கூறினேன். எனவே போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு தடை விதிக்க வேணடும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘‘ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை சிபிஐ போலீசார் தான் விசாரிக்கின்றனர்’’ என கூறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் சிபிஐயையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணயை ஜூன் 3க்கு தள்ளி வைத்தார்.

Tags : ICC ,CBI ,Kamal , ICC order to include CBI in Kamal case in connection with Sterlite agitation
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...