×

புதுச்சேரியில் விலை குறைந்தது மதுபானங்கள் மீதான கோவிட் வரி ரத்து

புதுச்சேரி: புதுவையில் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனோ தொற்று பரவ துவங்கியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மதுபானக் கடைகள், பார்கள் மூடப்பட்டன. 2 மாதங்களுக்கு பிறகு மே 24ம் தேதி மீண்டும் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்தது. அப்போது மதுபானங்கள் மீது கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டதால் மதுபானங்கள் மீதான கோவிட் வரி ரத்தாகும் என மது பிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த வரி நீக்கப்படவில்லை. இந்த நிலையில் புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மதுபானங்கள் மீதான கோவிட் சிறப்பு வரி 2021, ஏப்ரல் 7ம்தேதியுடன் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்தது.


Tags : Govt ,Pondicherry , Govt cancels tax on cheap liquor in Pondicherry
× RELATED வாக்கு எண்ணிக்கை மையமான அரசு...