பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஜெயக்குமாருக்கு நேற்று முன்தினம் மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் பெருந்துறை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக சென்றார். அங்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 10 நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வேட்பாளர் ஜெயக்குமார் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். விஜிலா சத்யானந்த்: நெல்லை முன்னாள் மேயரும், அதிமுக முன்னாள் எம்பியுமான விஜிலா சத்யானந்த் கொரோனா தொற்று காரணமாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>