திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் (86), கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிப்பில் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். சிவாஜி கணேசன் உள்பட பல முன்னணி ஹீரோக்கள் நடிப்பில் 70 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள அவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இந்நிலையில், திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘எஸ்.பி.முத்துராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீரடைந்து வருகிறது’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>