கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சச்சின் டெண்டுல்கர் வீடு திரும்பினார்

மும்பை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பேன் என்றும் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 27-ம் தேதி சச்சின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து, தனது வீட்டில் தனிமையில் இருந்த சச்சின் டெண்டுல்கர் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: