×

கொத்து கொத்தாக பரவும் கொரோனா: நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு பாதிப்பு உறுதி: கட்டுப்பாட்டை தீவிரப்படுத்திய மாநகராட்சி

நெல்லை: நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பேட்டை செந்தமிழ் நகரில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு உள்ள நபர்களின் தெருக்களை அடைக்கும் பணியும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 2 டாக்டர்கள் உள்பட 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 15 ஆயிரத்து 816 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றும் 14 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 444 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 217 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் பேட்டை, செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : CORONA ,Nelam , Corona spreading in clusters: 13 members of the same family in Nellai affected: Corporation intensified control
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...