×

டெக்ஸாஸ் மாகாணத்தின் ரசாயன கிடங்கில் பயங்கர தீ!: வானுயர எழும் கரும்புகை..ஒட்டுமொத்த கிடங்கையே கபளீகரம் செய்யும் நெருப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் நகரில் ரசாயன கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சானல் வியூ என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த ரசாயன கிடங்கில் அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த கிடங்களில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பானது பெருமளவில் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து மளமளவென பற்றிய தீ சிறிது நேரத்தில் ஒட்டுமொத்த கிடங்கையே கபளீகரம் செய்தது. பல கிலோ மீட்டர் உயரத்திற்கு கரும்புகை பரவி வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் பெருநெருப்பை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர். இந்த ரசாயன கிடங்கில், நச்சு மிகுந்த மோனோ எத்தனாலமைன் ஆல்கஹால் மற்றும் டிரை எத்தனாலமைன் ஆல்கஹால் பலநூறு பீப்பாய்களில் நிரப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒரு பீப்பாயில் இருந்து மற்றொரு பீப்பாய்க்கு மாற்ற முயன்ற போது தீ பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நச்சு மிகுந்த வேதி திரவம் பற்றி எரிந்து வருவதால் காற்றில் இதுவரை எந்த நச்சும் பரவியதாக கண்டறியப்படவில்லை என்று டெக்ஸாஸ் மாகாண அரசு விளக்கம் அளித்துள்ளது.


Tags : Texas , Texas, chemical warehouse, fire, cane
× RELATED ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கைக்கான ஒப்பந்தம் புதுப்பிப்பு