×

‘விஞ்ஞானி... விஞ்ஞானிதான்ய்யா...’ அமைச்சர் செல்லூர் ராஜூ ‘மை’ வைத்த விரலில் கையுறை

மதுரை: மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ. இவர் நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்து விட்டு, வாக்கு இயந்திரம் இருந்த இடத்தில் நின்றபடியே தான் தேர்தலில் வாக்களித்ததற்கான அடையாளமாக ஆள்காட்டி விரல் மையை காட்டி, போஸ் கொடுத்தார். இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக வாக்களிக்க சென்றவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரு பாலித்தீன் கையுறை தரப்பட்டது. இதனை ஓட்டு போடுவதற்கான வலது கையில் அணிந்து கொள்ள வேண்டும். இடது கையின் ஆள்காட்டி விரலில்தான் மை வைக்கப்படும். ஆனால், அமைச்சர் செல்லூர் ராஜூ மை வைக்கப்பட்ட விரலைக் கொண்ட இடது கைக்கு கையுறை மாட்டி, ைகயுறைக்குள் இருக்கும் மை வைக்கப்பட்ட ஆள்காட்டி விரலைக் காட்டுகிறார்.  இந்த படம், ‘‘விஞ்ஞானி... விஞ்ஞானிதான்ய்யா...’’ என்ற அடிக்குறிப்புடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே,  வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க, தெர்மோகோல் போட்ட செயல், அமைச்சர் செல்லூர் ராஜூவை கடந்த காலங்களில் ரொம்பவே விமர்சிக்க வைத்தது. ‘‘அதிகாரிகள் தெரிவித்ததால், தெர்மோகோல் போட்டேன்’’ என்று கூறி வரும் நிலையில், தற்போது கையுறை போட்டு, ஆள்காட்டி விரலை காட்டி போட்டோவிற்கு போஸ் கொடுத்திருப்பது, மீண்டும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



Tags : Minister ,Chellur Raju , ‘Scientist ... Scientist ...’ Minister Cellur Raju puts glove on the finger with ‘ink’
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...