×

முதல்வர் உள்பட பல அமைச்சர்கள் போட்டியிட்ட சட்டமன்ற தொகுதிகளில் 80% வாக்குப்பதிவு: பணம், பொருள் அதிகளவு நடமாட்டம்: கைகட்டி போலீசார் வேடிக்கை பார்த்தனர்

சென்னை: முதல்வர் எடப்பாடி உள்பட பல அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதனால் அந்த தொகுதிகளில் அதிக பண நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அதிகளவு ஓட்டுகள் பதிவாகியுள்ளது. அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட தொகுதியில் 73.65 சதவீதம், அமைச்சர் பென்ஜமின் - மதுரவாயல் 61 சதவீதம், அமைச்சர் கே.சி.வீரமணி - ஜோலார்பேட்டை 80.82 சதவீதம், கே.பி.முனுசாமி எம்பி - வேப்பனஹள்ளி 81.03 சதவீதம்,

அமைச்சர் கே.பி.அன்பழகன் - பாலக்கோடு 87.33 சதவீதம், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் - ஆரணி 79.88 சதவீதம், அமைச்சர் சரோஜா - ராசிபுரம் 82.19 சதவீதம், அமைச்சர் தங்கமணி - குமாரபாளையம் 78.81 சதவீதம், அமைச்சர் கே.சி.கருப்பணன் - பவானி 83.07 சதவீதம், அமைச்சர் செங்கோட்டையன் - கோபிச்செட்டிப்பாளையம் 82.51 சதவீதம், சபாநாயகர் தனபால் - அவினாசி 75.18 சதவீதம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி - தொண்டாமுத்தூர் 71.04 சதவீதம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் - பொள்ளாச்சி 77.28 சதவீதம், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - உடுமலைப்பேட்டை 71.42 சதவீதம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் - நத்தம் 79.07 சதவீதம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - திண்டுக்கல் 68.94 சதவீதம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கரூர் 83.05 சதவீதம், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் - திருச்சி (கிழக்கு) 66.86 சதவீதம், அமைச்சர் எம்.சி.சம்பத் - கடலூர் 74.77 சதவீதம், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் - வேதாரண்யம் 80.06 சதவீதம்,

அமைச்சர் காமராஜ் - நன்னிலம் 82 சதவீதம், அமைச்சர் செல்லூர் ராஜு - மதுரை மேற்கு 65.15 சதவீதம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் - திருமங்கலம் 78.11 சதவீதம், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி - ராஜபாளையம் 73.86 சதவீதம், ஆர்.வைத்திலிங்கம் எம்பி - ஒரத்தநாடு 78.24 சதவீதம், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் - விராலிமலை 85.43 சதவீதம், அமைச்சர் கடம்பூர் ராஜு - கோவில்பட்டி 67.43 சதவீதம், அமைச்சர் ராஜலட்சுமி - சங்கரன்கோவில் 71.47 சதவீதம், அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் - ஆலங்குளம் 77.04 சதவீதம், டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் - கன்னியாகுமரி 75.34 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலான அமைச்சர்கள் தொகுதியில் 80 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் வாங்கியுள்ளனர். பண நடமாட்டம் இருந்ததால் தான் இவ்வளவு அதிகளவு வாக்குகள் வாங்க முடிந்ததாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தொகுதிகளில் போலீசார் கை கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இதுவும் வாக்குபதிவு அதிகரிக்க காரணமாக இருந்தது என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தொகுதியில் 60.52 சதவீதம் வாக்கு பதிவு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு 60.72 சதவீதம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீதம், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம் தொகுதி 74.14 சதவீதம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி 67.43 சதவீதம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில 58.41 சதவீதம், பாஜ சார்பில் நடிகை குஷ்பு போட்டியிட்ட ஆயிரம்விளக்கு தொகுதியில் 58.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Tags : Principal ,Gaikti police ,
× RELATED வழக்கில் சமரசம் செய்து கொண்டால்...