×

காரில் தனியாக போனாலும் முகக்கவசம் கட்டாயம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த டெல்லி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களுக்கு சொந்த காரில் தனியாக சென்றாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கடந்தாண்டு ஏப்ரலில் அது உத்தரவிட்டது. முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலித்தது. இதனால் பாதிக்கப்பட்ட 4 வக்கீல்கள், இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி பிரதீபா சிங் முன் விசாரணைக்கு வந்தது.

அவர் தனது தீர்ப்பில் மேலும் கூறியதாவது; தொற்று காலத்தில் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது. இதன் மூலம், தொற்று பரவாமல் தற்காத்து கொள்வதோடு, பிறருக்கும் பரவாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. முகக்கவசம் அணியும் ஒற்றை நடவடிக்கையின் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும். காரில் தனியாக பயணித்தாலும் அவர் வெளியுலக தொடர்பில் இருப்பதாகவே கருதப்படும். அவரால் மற்றவர்களுக்கு தொற்று பரவாது என்று கூற முடியாது. தனியாக தனது காரில் சென்றாலும் அவர் பொது இடத்தில் இல்லை என்று கூற முடியாது. எனவே, அவர் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Delhi High Court , Face mask mandatory even if left alone in car: Delhi High Court orders action
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...