ராமசாமி கோப்பை ஹாக்கி அரை இறுதியில் இன்று ஐசிஎப் - ஐஓபி பலப்பரீட்சை: சேலஞ்சர்ஸ் - இந்தியன் வங்கி மோதல்

சென்னை: ராமசாமி கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் ஐசிஎப் - ஐஓபி, சென்னை சேலஞ்சர்ஸ் ஹாக்கி - இந்தியன் வங்கி அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை போரூரில் என்.பி.வி.ராமசாமி கோப்பை ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. கடைசி லீக் போட்டிகளில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி கல்லூரி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தையும், சென்னை சேலஞ்சர்ஸ் ஹாக்கி அணி 10-0 என்ற கோல் கணக்கில் லயோலா கல்லூரி அணியையும் வீழ்த்தின. இந்தியன் வங்கி 4-2 என்ற கோல் கணக்கில் மத்திய வரிகள் துறை அணியை வென்றது.

இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. ஏ பிரிவில் தலா 10 புள்ளிகளுடன்  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), சென்னை சேலஞ்சர்ஸ் ஹாக்கி அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெற்றன. பி பிரிவில் 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இணைப்பு பெட்டித் தொழிற்சாலை (ஐசிஎப்), 12 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த இந்தியன் வங்கி அரையிறுதிக்குள் நுழைந்தன. இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் சேலஞ்சர்ஸ் ஹாக்கி - இந்தியன் வங்கி அணிகளும், 2வது அரையிறுதியில் ஐசிஎப்-ஐஓபி அணிகளும் விளையாட உள்ளன. இறுதிப்போட்டி நாளை நடைபெறும்.

Related Stories:

>