×

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவிடம் அடிக்கல் நாட்டினார் திகைத்

காஜியாபாத்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உபி. விவசாயிகள் டெல்லி எல்லையில், கடந்த 4 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், இதுவரை 320 விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாய தியாகிகளுக்கு, காஜிபூர்-காஜியாபாத் எல்லையில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விவசாய சங்கங்கள் செய்துள்ளன. இந்த நினைவிடத்துக்கு பாரதிய கிசான் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் நேற்று அடிக்கல் நாட்டினார். இது குறித்து ராகேஷ் கூறுகையில், ``நினைவிட கட்டுமானத்துக்காக 50 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் உயிரிழந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 320 விவசாய தியாகிகளின் சொந்த கிராமங்களில் இருந்து மண் எடுத்து வர, `மிட்டி சத்யாகிரக யாத்திரை’ நடத்தப்பட்டது,’’ என்றார். ஆனால், காஜியாபாத் மாவட்ட ஆட்சியர் அஜய் சங்கர் பாண்டே கூறுகையில், ``விவசாய தியாகிகளின் நினைவிடம் தற்காலிகமானது. நிரந்தரமானது அல்ல,’’ என்றார்.

Tags : Delhi , The foundation stone was laid for the farmers who lost their lives in the Delhi struggle
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...