×

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி பல்லாரியில் விமான நிலைய பணிக்கு பூமிபூஜை

பல்லாரி: விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி பல்லாரியில் விமான நிலையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.  பல்லாரி மாவட்டத்தில் சர்வதேச தரத்துடன் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து பல்லாரியில் விமான நிலையம் அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டது. இந்த விமான நிலையத்தை சாகனூரு-சிரவாரா கிராமப்பகுதியில் அமைக்க முடிவு செய்து அந்த பகுதியில் சுமார் 900 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 812.70 ஏக்கர் நிலம் மட்டுமே அரசுக்கு கிடைத்த நிலையில் மீதமுள்ள நிலத்தை விமான நிலையம் அமைக்க விவசாய நிலத்தை தரமாட்ேடாம் என்று கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அரசு விமான நிலையம் அமைக்கும் முடிவை கைவிடாத நிலையில் விவசாயிகள் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

நீதிமன்றம் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்னும் வராதநிலையில் தற்போது விமான நிலையம் அமைக்க ₹150 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு விமான நிலைய பணிகள் தொடங்க தனியார் நிறுவனம் மூலம் விமான நிலையம் கட்டும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டது. விவசாயிகளின் எதிர்ப்பை மீறி பல்லாரியில் விமான நிலையம் அமைக்க பூமி பூஜை நடத்தி இருப்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Bhoomipooja ,Ballari , Farmer, in Miri Ballari, for airport work, Bhoomipooja
× RELATED கர்நாடகாவில் போலீசார் சோதனையில் ரூ.5...