ஐஎன்எக்ஸ் முறைகேடு ப.சிதம்பரத்துக்கு சிபிஐ நீதிமன்றம் ஆஜராக விலக்கு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக அன்னிய முதலீ்டு பெறுவதற்கு லஞ்சம் பெற்றதாகவும், இது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. டெல்லியில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு நேற்று நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் உத்தரவிடப் பட்டது. ஆனால், தமிழகத்தில் தேர்தல் நடப்பதால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கும்படி இவரும் கோரினர். இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

Related Stories:

>