×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஷிப்ட் முறையில் பணியாற்றும் போலீசார்

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு, 3 ஷிப்ட் அடிப்படையில் போலீசார் பணியாற்றுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், சோழிங்கல்நல்லூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நேற்று முன்தினம் மேற்கண்ட தொகுதகிளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
இதில், செங்கல்பட்டு 63.5%, திருப்போரூர் 76.74%, செய்யூர் 78.16%, மதுராந்தகம் 80.01%, சோழிங்கல்நல்லூர் 57.86%, பல்லாவரம் 60.8%, தாம்பரம் 59.3%. சராசரி 65.08 என சராசரியாக 62.77 சதவீத வாக்குகள் பதிவானது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூா் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆசான் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இங்கு எஸ்பி சுந்தரவதனன் தலைமையில், 6 கண்காணிப்பு கோபுரம் அமைத்து, 3 டிஎஸ்பி, 9 இன்ஸ்பெக்டர்களுடன் 3 ஷிப்ட் அடிப்படையில் சுழற்சி முறையில் 360 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மதுராந்தகம், செய்யூர் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயங்நதிரங்கள் நெல்வாய் கூட்ரோட்டில் உள்ள ஏசிடி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அங்கு ஒரு டிஎஸ்பி, 6 இன்ஸ்பெக்டர் கொண்ட போலீசார் 320 போலீசார், 3 ஷிப்ட். அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள், தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு பரங்கிமலை துணை கமிஷனா் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கண்ட பகுதியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களை கலெக்டர் ஜான்லூயிஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆலந்தூர்-60.85%. ஸ்ரீபெரும்புதூர் 74.03%, காஞ்சிபுரம் 72.96%, உத்திரமேரூர் 80.09% என சராசரியாக 69.47% வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து அனைத்து வாக்கு சாவடிகளிலும் அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்களை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.


Tags : Chengalpattu ,Kanchipuram , Voting machines with 3 layers of security in Chengalpattu and Kanchipuram districts: Police working in shifts
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...