×

அந்தியூர் தொகுதியில் இயந்திர கோளாறால் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்

ஒருவரே மூன்று முறை பட்டனை அழுத்தியதால் பரபரப்பு

அந்தியூர் : ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூங்கில்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூங்கில்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. மேலும் ஒருவர் வாக்குப்பதிவு செய்யும்போது, பீப் சவுண்ட் வராததால், தொடர்ந்து மூன்று முறை பட்டனை அவர் அழுத்தியதன் காரணமாக மூன்று முறை அவர் வாக்களித்ததாக கூறி முகவர்கள் புகார் தெரிவித்தனர். ஒருவர் மூன்று முறை வாக்களித்து விட்டதாக புகார் எழுந்தது.

இதன் காரணமாக, சம்பவ இடத்திற்கு திமுக வேட்பாளர் வெங்கடாசலம் மற்றும் அதிமுக, விடுதலை களம் கட்சியினர் விரைந்து வாக்குச்சாவடிக்கு சென்றனர். இதையறிந்த மாவட்ட வருவாய் அலுவலரும் சம்பவ இடத்திற்கு சென்று முகவர்கள் மற்றும் வேட்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் ஆய்வு செய்தனர்.

இதில், இயந்திரத்தில் வாக்குப்பதிவுகள் முன்னுக்குப்பின் முரணாக பதிவானது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் அங்கிருந்த கட்சியினருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ மூலம் கடிதம் வழங்கியதால், சமாதானம் அடைந்தனர். எதிர்க்கட்சியினர் மற்றும் வாக்களிக்க வந்தவர்கள் வாக்குச்சாவடி முன் திரண்டதால், 50க்கும் மேற்பட்ட போலீசாரும், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர்.

இது குறித்து அந்தியூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ.ஜி.வெங்கடாசலம் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு என தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்தோம். வாக்கு இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டில் 198 வாக்குகளும், வாக்கு இயந்திரத்தில் 201 வாக்குகளும் பதிவாகி இருந்தது.

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளிக்கும்போது, பீப் சவுண்ட் கம்மியாக வந்ததாகவும், ஒருவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்கும்போதும் பீப் சவுண்ட் கேட்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதன் காரணமாக அவரை மீண்டும் மீண்டும் மூன்று முறை வாக்களிக்க வைத்துள்ளனர். இதனால், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சரியாக பதிவாகாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று  குற்றம்சாட்டினர்.

97வது வாக்குச்சாவடியிலும், அந்தியூர் அருகே உள்ள வட்டகாட்டிலும், அந்தியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 186வது வாக்குச்சாவடியிலும் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடமும், தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் புகார் தெரிவித்தபோது, அவர்கள் கடிதம் வாயிலாகவே 3 வாக்குகள் அதிகமாக இருப்பதை வாக்கு எண்ணும்போது சரி செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் கடிதம் அளித்ததை அடுத்து அதனை பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சியினர் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.

Tags : Anthiyur , Anthiyur: About 3 due to mechanical malfunction at the Moongilpatti polling station in Anthiyur assembly constituency of Erode district.
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58 சதவீதம் வாக்குகள் பதிவு