×

ராமேஸ்வரத்தில் அபாயமாக இயங்கும் அரசு பேருந்து: அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பினர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே அரசு நகரப் பேருந்தை கண்டக்டர் இயக்கியதால் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை பேருந்து நிறுத்தத்திலிருந்து அரிச்சல்முனை வரை அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று காலை அரிச்சல் முனையில் இருந்து வந்த அரசுப் பேருந்தை கண்டக்டர் உதயா இயக்கியுள்ளார். தனுஷ்கோடி நோக்கி வந்த பஸ் சாலையிலிருந்து விலகி கடலுக்குள் செல்லும் அபாயத்தில் சென்றதால் மீனவ பயணிகள் அலறி அடித்தனர். இதனால் அச்சமடைந்த சில மீனவ மக்கள் தனுஷ்கோடி சர்ச் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டனர். தொடர்ந்து கண்டக்டர் பேருந்தை இயக்கினார். மீனவ பயணிகளோடு எம் ஆர் சத்திரம் நோக்கி வேகமாக வந்த பஸ் ஆமை குஞ்சு பொரிப்பகம் அருகே தடுப்பில் மோதி கவிழ்ந்து விழும் அபாயத்தில் விபத்துக்குள்ளானது.

இதில் மகாதேவி என்பவர் தலையில் பலத்த ரத்த காயம் அடைந்தார். சாலையோரத்தில் மீன்வாலியுடன் நின்றவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் என்பதால் டிஜிட்டல் ஸ்கேன் செய்ய  முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் பேருந்தின் அடிப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது இயக்க முடியாத நிலையில் நின்றது. விபத்து கூறித்து தனுஷ்கோடி மீனவர்கள் கூறியது. அரிச்சல் முனையிலிருந்து பஸ் செல்லும் பொழுது டிரைவருக்கு பதிலாக கண்டக்டர் தான் பஸ்சை ஓட்டி செல்வார். பல நேரம் விபத்து ஏற்படும் அபாயங்கள் உருவாகியது.

இதனாலேயே மீனவ மக்கள் அரசு பஸ்ஸில் செல்லாமல் சரக்கு வாகனத்தில் செல்கின்றனர். கண்டக்டர் பஸ்சை ஒட்டக்கூடாது என பலமுறை எச்சரிக்கை செய்தும் அவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் ஆபத்தாகவே பஸ்சை இயக்கி வந்தனர். இன்று காலையில் கண்டக்டர் உதயா பஸ்ஸை வேகமாக ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகினார் என‌ கூறினர். இது  போன்ற செயலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் விபத்து குறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Rameswaram , Dangerous government city bus in Rameswaram: Fortunately the fishermen survived
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...