×

தமிழக சட்டசபை தேர்தலில் 72.78% வாக்குப்பதிவு :அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33%; குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.52%

சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.78% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகின.குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகின. முதல்வர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6% பேரும் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 60.52% பேரும் வாக்களித்துள்ளனர்.

ஓபிஎஸ் போட்டியிடும் போடியில் 73.65% பேரும், கமல் போட்டியிடும் கோவை தெற்கில் 60.72% பேரும், டிடிவி போட்டியிடும் கோவில்பட்டியில் 67.45 பேரும், சீமான் போட்டியிடும் திருவொற்றியூரில் 65% பேரும் வாக்களித்துள்ளனர்.

வாக்குகள் அதிகம் பதிவான டாப் 5 தொகுதிகள் :

பாலக்கோடு : 87.33%
குளித்தலை : 86.15%
எடப்பாடி : 85.6%
வீரபாண்டி : 85.53%
ஒட்டன் சத்திரம் : 85.09%

வாக்குகள் குறைவாக பதிவான டாப் 5 தொகுதிகள் :

வில்லிவாக்கம் : 55.52%
தி.நகர் : 55.92%
வேளச்சேரி : 55.95%
மயிலாப்பூர் : 56.59%
அண்ணா நகர் : 57.02%

Tags : Tamil assembly ,Balakoat ,Willywam , Chief Electoral Officer of Tamil Nadu, Satya Pradha Saku
× RELATED வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு..!!