இரவு நேர ஊரடங்கு..பள்ளிகள், ஜிம், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மூடல் : குஜராத், டெல்லி, ஜார்க்கண்ட் அரசுகள் அதிரடி!!

டெல்லி : குஜராத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக, மாநிலத்தின் 20 முக்கிய நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு இன்று அமலாகிறது. இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு இம்மாத இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசு அலுவலகங்களும் 30 ம் தேதி வரை மூடப்படுவதாகவும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

திருமணம், விசேஷ திருவிழாக்களை ஒத்தி வைக்கும்படியும் குஜராத் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு உயர்வால் ஜார்க்கண்டில் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. அதன்படி,

*திருமண விழாக்களில் அதிகபட்சம் 200 பேருக்கு மட்டுமே அனுமதி.

*இறுதிச் சடங்குகள் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி.

*மத ஊர்வலங்கள் உள்பட அனைத்து ஊர்வலங்களுக்கும் தடை

*உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், அனைத்து பூங்காக்களும் மூடப்பட வேண்டும்.

*இரவு 8 மணிக்கு பின்னர் அனைத்து கடைகள், உணவு விடுதிகள் மற்றும் கிளப்புகள் திறந்திருக்க அனுமதி கிடையாது.

*எனினும், உணவு பொருட்களை வீட்டுக்கு எடுத்து செல்வதும் மற்றும் வீட்டுக்கு சென்று விநியோகம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அரசு வெளியிட்ட வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் வருகிற 30-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரவுநேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related Stories:

>