சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது

* துணை ராணுவத்தினருடன் 3 அடுக்கு பாதுகாப்பு

* சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரம் கண்காணிப்பு

சென்னை: சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்து அறை மூடப்பட்டது. பாதுகாக்கப்பட்ட அறைக்கு சிசிடிவி பதிவுகளுடன், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினருடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ேநற்று இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. அதைதொடர்ந்து வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வந்து அரசியல் கட்சிகள் முகவர்கள் முன்னிலையில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

சென்னையை பொருத்தவரை 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் உதவியுடன் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணாப்பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். இந்த பணி நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 ெதாகுதிகளில் பதிவான வாக்குபதிவு இயந்திரங்கள் மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியிலும், கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்களை லயோலா கல்லூரியிலும், தி.நகர், சைதாப்பேட்டை, விரும்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிண்டியில் உள்ள அண்ணாப்பல்கலைக்கழக மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்கு எண்ணும் மையங்களில் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி மேராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீல் வைக்கப்பட்ட அறையை சுற்றிலும் 24 மணி நேரமும் துப்பாக்கிகளுடன் துணை ராணுவ படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் தனித்தனியாக சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சுழற்றி முறையில் பாதுகாப்பு பணிகள் வழங்கப்படுகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை ஓட்டு எண்ணும் நாளான மே 2ம் தேதி வரை இந்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதான, சென்னையில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்கு சாவடி மையங்கள் என்று அடையாளம் காணப்பட்ட கீழ்ப்பாக்கம் பூந்தல்லி நெடுஞ்சாலையில் உ ளள் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர் நிலைப்பள்ளி, மயிலாப்பூர் உருது ஆண்கள் தொடக்கப்பள்ளி, ராயப்பேட்டை இந்திய அலுவலர்கள் சங்க வளாகம், மயிலாப்பூர் சாந்தோம் உயர் நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு பிஸ்கெட் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வாங்கினர். பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கமிஷனர் ஆலோசனை நடத்தினர்.

அமைதியாக முடிந்த தேர்தல்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு பதிவு முடிவடைந்ததும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநகர காவல் துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 23,500 மாநகர காவலர்கள் உட்பட 30 ஆயிரம் பேர் சிறப்பான பாதுகாப்பு பணிகளால் மாநகரில் எந்த பகுதியிலும் பெரிய அளவில் பிரச்னைகள் இல்லை. ஒரு சில இடங்களில் நடந்த பிரச்னைகள் உடனே தீர்த்து வைக்கப்பட்டது. பதற்றம் மற்றும் மிக பதற்றமான வாக்கு சாவடிகள் என்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலும் எந்த பிரச்னையும் நடைபெற வில்லை. நான் பல இடங்களில் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து அங்குள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினேன். வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். திட்டமிட்ட பாதுகாப்பால் சென்னையில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

 இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>