விஜயகாந்த் வாக்களிக்கவில்லை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் ஒரு வாரம் பிரசாரம் செய்தார். அவர் வாகனத்தில் இருந்தபடி வாக்கு சேகரித்து விட்டு மட்டும் சென்றார். எதுவும் அவர் பேசவில்லை. இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில் தேமுதிக பொருளாளரும், விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளருமான  பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிகிராமம் காவேரி உயர் நிலைப்பள்ளியில் வாக்களித்தார். இதே போல் விஜயகாந்த் மகன்கள் சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோரும் வாக்களித்தனர். மேலும் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் அவர் குடும்பத்தினருடன் வாக்களித்தார். ஆனால், விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் வாக்களிக்க வரவில்லை என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories:

More
>