திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நீக்கப்பட்ட அர்ச்சகர்கள் மீண்டும் பணியில் சேர்ப்பு : ஜெகனுக்கு லட்டு கொடுத்து நன்றி

திருமலை:  திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில்களில் பணிபுரிந்து வந்த 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கடந்த 2018ல் தேவஸ்தானம் கட்டாய ஓய்வு அளித்து அனுப்பியது. சில அர்ச்சகர்கள் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கும்படி 2018, டிசம்பரில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், அவர்கள் பணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் ரமண தீட்சிதர் தலைமையில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகனை சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர், ‘நான் முதல்வரானதும் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடுகிறேன்’ என்று உறுதியளித்தார். தற்போது, முதல்வராக உள்ள அவரை ரமண தீட்சிதர் சந்தித்து முறையிட்டார்.

இந்நிலையில், இவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. இதனால், ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவராக ரமண தீட்சிதர் மீண்டும் பணியில் சேர்ந்தார். அவருடன் 15 அர்ச்சகர்கள் மீண்டும் நேற்று பணியில் சேர்ந்தனர். அவர்கள் முதல்வர் ெஜகனை சந்தித்து லட்டு பிரசாதம் வழங்கி நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>