×

அமெரிக்காவின் மிரட்டல் ரஷ்யாவின் எஸ்-400 ஆயுதம் கிடைக்குமா?: வெளியுறவு அமைச்சர்கள் மழுப்பல்

புதுடெல்லி: ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந்து வானில் 400 கிமீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கிறது. இந்தாண்டு டிசம்பரில் இந்தியாவிற்கு எஸ்-400 ஆயுதத்தை ரஷ்யா வழங்க இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இந்த ாயுதத்தை வாங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போதைய அதிபர் ஜோ பைடனும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாப்ரோவ், 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். இவர், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். இதில், ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ், ரஷ்யாவின் ராணுவ உபகரண உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, எஸ்-400 சப்ளை பற்றி கேட்கப்பட்டதற்கு இருவருமே உறுதியான பதிலை அளிக்காமல் மழுப்பினர். ஜெய்சங்கர் கூறுகையில் ‘‘இந்தாண்டு இறுதியில் நடக்கும் இருநாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கூட்டத்தில், எஸ்-400 ஆயுத சப்ளை குறித்து விவாதிக்கப்படும்,” என்றார்.


Tags : US ,Russia , US, Threat Russia, S-400 Weapons, Foreign Ministers
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...