தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் ஒரு மணி நேரத்தில் நிறைவடைகிறது

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் ஒரு மணி நேரத்தில் நிறைவடைகிறது. சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப்போட 6 மணிக்குள் வாக்காளர்கள் வாக்குச்சாவடி செல்ல வேண்டும். மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா நோயாளிகள், அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படும். இதுவரை வாக்களிக்காதவர்கள் 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு சென்று டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். மாலை 6 மணிக்குள் டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>