முகக்கவசம் அணியாமல் வாக்களித்த அமைச்சர் சீனிவாசன் : வாக்காளர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் எம்.வி.எம்.கலைக்கல்லூரியில் முகக்கவசம் அணியாமல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்களித்தார்.பின் அவர் கூறுகையில், ‘எடப்பாடி அரசுக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவு வெற்றிகளைப் பெறுவோம். மாதம் மும்மாரி மழை பெய்வதால் எடப்பாடி மீது மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்’ என்றார். அவருடன் அவரது மனைவி நாகேஸ்வரி, மகன்கள் ராஜ்மோகன்,சதீஷ், பிரபு உட்பட பலர் வாக்களித்தனர்.

அவருக்கு உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டது. கையில் கையுறை அணிந்து வாக்களித்தார். ஆனால் முகக்கவசம் அணியவில்லை. வாக்களித்து விட்டு திரும்பும் போது கிருமி நாசினி கொண்டு கையை சுத்தம் செய்து கொண்டார். ஒரு அமைச்சராக இருப்பவர் முகக்கவசம் அணியாமல் வாக்களித்தது வாக்காளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories:

>