×

உலகின் உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தின் வளைவு இணைப்புப்பணி நிறைவு : பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி : உலகின் உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தின் வளைவு இணைப்புப் பணியை இந்திய ரயில்வே நிறைவு செய்ததை ஒட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரிலுள்ள பள்ளத்தாக்குகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் செனாப் நதியின்மீது 1.3 கிமீ தொலைவில் ரயில்வே பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. சுமார் 1,486 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பாலத்தின் வளைவு பகுதியை அமைக்கும் பணி நேற்று முடிவடைந்தது. காணொலி வாயிலாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று இந்த பணிகளை ஆய்வு செய்தார்.

செனாப் ரயில்வே பாலமானது ஆற்றின் மேலே இரண்டு மலைகளுக்கு நடுவே 359 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயரம் பிரான்சின் பாரிஸில் உள்ள ஈபில் டவரைவிட 35 மீட்டர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், செனாப் பாலத்தின் வளைவு இணைப்புப் பணியை இந்திய ரயில்வே நிறைவு செய்ததை ஒட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நமது நாட்டு மக்களின் திறமையும், நம்பிக்கையும் உலகத்தின் முன் ஒரு உதாரணத்தை உருவாக்கி வருகிறது என்று டிவிட்டர் பதிவொன்றில் திரு மோடி தெரிவித்துள்ளார். இந்த கட்டுமானம் நவீன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், ‘லட்சியத்தை அடைதல்’ எனும் கொள்கையோடு மாறிவரும் பணி கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Modi ,Senap Bridge , பிரதமர் மோடி
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...