×

சாதி, மதங்களுக்கு எதிரானதே எனது நிலைப்பாடு, மனிதர்கள் தான் முக்கியம்..! வாக்கு செலுத்திய பின் விஜய் சேதுபதி பேட்டி

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை நடிகர் விஜய்சேதுபதி பதிவு செய்தார். பின்னர் பேசிய அவர்; சாதி, மதங்களுக்கு எதிரானதே எனது நிலைப்பாடு, மனிதர்கள் தான் முக்கியம் என கூறினார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1 மணி நிலவரப்படி 39.61%வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79% வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 32.29% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக திரை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நிலையில் அதில் வித்தியாசமாக சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து பின் பைக்கில் வீடு திரும்பினார் விஜய். அவரது இந்த செயல் அனைவரது மத்தியிலும் பேசுபொருளானது. இதையடுத்து வீட்டுக்கு அருகில் வாக்கு செலுத்தும் மையம் இருப்பதாலும் காரில் அப்பகுதிக்குச் சென்றால் சிரமம் ஏற்படும் என்ற காரணத்தினால் மட்டுமே சைக்கிளில் சென்றதாக அவர் சைக்கிளில் சென்றதாகவும் அவரது மக்கள் தொடர்பாளர் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றும் மனிதன் தான் முக்கியம் என்றும் பேட்டியளித்தார். மேலும் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த விஜய் சேதுபதி நடிகர் விஜய் சைக்கிளில் வந்தது குறித்து அவரிடம் போய் கேளுங்கள் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் எஙனறு காட்டமாக கூறினார்.

Tags : Vijay Sethupati , My position is against caste and religion, human beings are important ..! Interview with Vijay Sethupathi after voting
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு...