×

மதுரவாயல் தொகுதியில் வாக்களிக்க வந்த மக்களை சாதிரீதியாக திட்டிய அமைச்சர் பெஞ்சமின்!: வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு..!!

திருவள்ளூர்: மதுரவாயலில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தகாத வார்த்தைகளால் அமைச்சர் பெஞ்சமின் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. ஊரக தொழில் துறை அமைச்சர் அதிமுகவை சேர்ந்த பெஞ்சமின் மதுரவாயல் அருகாமையிலிருக்க கூடிய எம்.ஜி.ஆர். ஆதர்ஷ் பள்ளி அருகே வாக்களிக்க சென்ற போது தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும் இதனை அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கிருக்கக்கூடிய வாக்காளர்களுக்கும், அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமைச்சர் பெஞ்சமின்  வாக்காளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ள வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரவாயல் 92வது வார்டில் வாக்களிக்க வந்த மக்களை சாதிரீதியாக பெஞ்சமின் திட்டியதாக குற்றம்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து பெஞ்சமினை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து வாக்குசாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அமைச்சரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர். அமைச்சராக இருந்துகொண்டு இதுபோன்று வாக்களிக்க வந்த இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், தகாத வார்த்தையில் பேசுவதும் அப்பகுதியில் வாக்களிக்க வந்த பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


Tags : Minister ,Benjamin ,Maduravayal , Maduravayal constituency, caste, Minister Benjamin, video display
× RELATED தேர்தல் விதிமுறைகள் மீறி விழா: அதிமுக மாஜி அமைச்சர் பெஞ்சமின் மீது வழக்கு