பச்சை நிற டி சர்ட்... சைக்கிள் பயணம்.. மக்களுக்கு விஜய் சொன்ன மெசேஜ் : #ThalapathyVijay #PetrolDieselPriceHike தேசிய அளவில் ட்ரெண்டிங்!!

சென்னை : நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்து #ThalapathyVijay #PetrolDieselPriceHike போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பல்வேறு பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் விஜய் வித்தியாசமான முறையில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு அவர் சைக்கிளை ஒட்டியபடி வந்து அங்கு தனது வாக்கை பதிவு செய்து அசத்தினார். பச்சைநிற டீ சட்டை அணிந்தபடி அவர் சைக்கிள் ஓட்டி வந்ததை ரசிகர்கள் இரு புறமும் சூழ்ந்து நின்று ஆரவாரத்துடன் கோஷம் போட்டு வரவேற்றனர்.ஓட்டு போட்ட பிறகு ஒற்றை விரலை தூக்கி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.

தற்போது உலகம் முழுக்க வெப்பமயமாதல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் மற்றும் டீசலை தவிர்த்துவிட்டு சைக்கிள் ஓட்டுவது நல்லது என்ற மெசேஜ் விஜய் பகிர்ந்துள்ளார். எனவேதான் சைக்கிள் ஓட்டியபடி வந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். விஜய். அதை உணர்த்தும் வகையில்தான் பச்சை நிறத்தில் டீ சட்டை அணிந்து உள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதை உணர்த்தும் வகையில் அல்லது விலை உயர்வுக்கு எதிர்ப்பாக, விஜய் இவ்வாறு சைக்கிளில் வந்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால் கடந்த முறையும் விஜய் சைக்கிளில்தான் ஓட்டு போட வந்தார். எனவே அவர் மாசு குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்ததான் இப்படி வந்தார் என்று கூறப்படுகிறது.

Related Stories:

>