×

புதிதாக 96,982 பேருக்கு தொற்று... கொரோனா தினசரி பாதிப்பே உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா தொடர்ந்து முதலிடம்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.65 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.26 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 96,982 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,86,049 ஆக உயர்ந்தது.

* புதிதாக 446 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,65,547 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 50,143 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,17,32,279 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,88,223 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 92.48% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.30% ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 6.21% ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை இந்தியாவில்  8,31,10,926 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 43,00,966 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : India , India, Corona, Virus, Lockdown
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...