நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியை நடத்தி வருகிறார். இந்த சட்டமன்ற தேர்தலில் அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர் பிரசாரம் தொடங்க இருந்த நேரத்தில் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர், குணமாகி ஒரு சில இடங்களில் பிரசாரமும் செய்தார். இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. 3 வாரங்கள் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியிருப்பதாக தெரிகிறது.

Related Stories:

>